வீடுகளில் தனிமைப்படுத்தல் மற்றும் சுய தனிமைப்படுத்தல் மேற்கொள்பவர்களின் வீடுகளில் ஒட்டப்பட்டிருக்கும் அறிவுறுத்தலை,சுகாதார அதிகாரிகளினால் அகற்றும் வரையிலும்,வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் வீடுகளில் தனிமைப்படுத்தலை மேற்கொள்பவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்,அவ்வாறு வெளியேறும் நபர்கள் கைது செய்யப்படுவதோடு,தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த பின்னர் குறித்த அறிவுறுத்தல் சுகாதார அதிகாரிகளினால் அகற்றப்படும் என்றும்,அதுவரை காலமும் தனிமைப்படுத்தலை மேற்கொள்பவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தெரிவித்துள்ளதோடு,தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை உன்னிப்பாக கண்காணிக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





