லங்கா T10சுப்பர் லீக் தொடரில் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்திய நாட்டவர் ஒருவர் ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போட்டிகளை மாற்றும் நோக்கத்துடன் வெளிநாட்டு வீரர் ஒருவரை அணுகிய குற்றச்சாட்டின் பேரில் கண்டி பல்லேகலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர் நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு இந்தியர்கள்
முன்னதாக இலங்கையில் வைத்து இதுபோன்ற சம்பவம் ஒன்றில் இரண்டு இந்தியர்கள் மற்றும் பங்களாதேஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை தற்போது லங்கா T10சுப்பர் லீக் போட்டிகள் கண்டி பல்லேகலையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





