யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தின் எற்பாட்டில், ஆழிப் பேரலையின் உயிர்நீத்த உறவுகளுக்கான 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தேசிய கொடியேற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தின் உதவிப்பணிப்பாளர் என் ரீ.சூரியராஜ் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில், யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு நினைவேந்தலினை செலுத்தினார்
ஆத்மாசாந்திப் பிராத்தனைக்காக இரண்டு நிமிட ஆகவணக்கம் செலுத்த ப்பட்டதுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
இதில் யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், அனர்த்த முகாமைத்துவ பதவிநிலை அலுவலகர்கள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.






