நவீன விவசாய நடவடிக்கையை முன்னெடுத்து விவசாயிகள் உச்ச பயனை எவ்வாறு அடையலாம் என்பது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வடமாகாண பிரதம செயலாளர், மாவட்ட அரசாங்கதிபர், மேலதிக அரசாங்கதிபர் காணி, பிரதேச செலாளர்கள் ,விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.





