Wednesday, October 14, 2026
spot_img

யாழில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

- Advertisement -
யாழில் பலவிதமான போதைப்பொருள்களுடன் நால்வர் கைது!
நேற்றையதினம் (15) ஹெரோயின், கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் வைத்து அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் 50 கிராம் ஹெரோயின் மற்றும் 1000 மில்லிகாராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுளாளார். மேலும் கஞ்சாவுடன் ஒருவரும், போதை மாத்திரைகளுடன் இருவரும் என மொத்தமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க, யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தில்ருக் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.எஸ்.ராமநாயக்க அவர்களின் தலைமையில், சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் சிறிமாலின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -

Related Articles

Stay Connected

99,510FansLike
1,358FollowersFollow
862SubscribersSubscribe

Latest Articles