வீட்டினுள் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

0
351

இப்பாகமுவ பன்னல பிரதேசத்தில் நேற்றைய தினம் இரவு வேளையில் வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதில் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் பட்டாசுக்களில் உள்ள வெடிப்பொருட்களை அகற்றி அதனை இரும்புக்குழாயினுள் வைத்து பின்னர் குறித்த குழாயினை மின்சார சாணை கொண்டு அறுக்கச் சென்ற போது வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பில் காயமடைந்த 22 மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள் சிகிச்சைகளுக்காக குருநாகலை போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் ஒருவரின் கை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோகரல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.