மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றன

0
244

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகள்,முன்பள்ளி பாடசாலைகள் மற்றும் பிரவெனாக்கல் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதாவது,ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அத்துடன் தற்பொழுது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலமையை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் நாட்டில் ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் நாளைய தினம் தொடக்கம் வழமைப்போல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசின் தீர்மானத்திற்கமைய மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை மூடப்படும் என்று கொழும்பு பேராயர் இல்லத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.