நேற்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக 08 பேர் உயிரிழப்பு

0
342

நேற்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக 08 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் பதிவான கொரோனா உயிரிலப்புக்களின் மொத்த எண்ணிக்கை 655 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் பொல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 62 வயதுடைய ஆண்,ஹெட்டிபொல பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய ஆண்,மதுகம பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய ஆண்,நுகேகொடை பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய ஆண்,பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 76 வயதுடைய ஆண், அபகஹபெலஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய ஆண்,வத்தளை பிரதேசத்தில் வசிக்கும் 73 வயதுடைய பெண் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய ஆண் ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.