கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்ட விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு நாளைக்குள் அதிகளவானோர் நேற்றைய தினம்(30) கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரை 4,455 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





