நேற்றைய தினம் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் நபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி அலுத்தவத்த பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதினை உடைய நபர் ஒருவரே குறித்த விபத்திற்கு இலக்காகியுள்ளார் எனவும் அவரது சடலம் இன்று காலை கண்டுப்பிடிக்கப்பட்டதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கேகாலை பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் காணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





