கொரோனா தொற்றுடன் 2,173 பேர் அடையாளம்

0
227

இன்றைய தினம் கொரோனா தொற்றுடன் 2,173 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 212,834 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம் கொரோனா தொற்றிலிருந்து 2,168 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர் எனவும் அதன்படி நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 180,427 ஆக அதிகரித்துள்ளது.