நேற்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக 45 மரணங்கள் பதிவு

0
322

நேற்றைய தினம்(23) கொரோனா தொற்று காரணமாக 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த மரணங்களில் 27 ஆண்களும் 18 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 34 பேர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் எனவும் 30-59 வயதிற்கிடைப்பட்ட 10 பேர் மற்றும் 30 வயதிற்கும் குறைவான ஒருவர் ஆகியோரே இவ்வாறு பதிவாகியுள்ளனர்.