பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் புதன்கிழமை(14) தொடக்கம் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பயணிப்போருக்கு மாகாணங்களுக்கிடையே ஒரு குறிப்பிட்டளவு எண்ணிக்கையிலான பேருந்துகளை இயக்குவதற்கு தீர்மானத்துள்ளதாக போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இன்று(12) கண்டி கங்கவட்ட கோரளையில் இடம்பெற்ற தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாரு தெரிவித்துள்ளார்.அத்துடன் ரயில் சேவைகளும் ஒரே நேரத்தில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளாதவது, “புதன்கிழமை முதல் வரையறுக்கப்பட்ட போக்குவரத்துக்கள் இயக்கப்படும்.உதாரணமாக வேலைக்கு செல்வோரை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மீண்டும் அவர்களை வேலையில் இருந்து வீடு திரும்போவரை ஏற்றி வரும் ரயில்கள்.அதே நேரம் மாகணங்களுக்கிடையே பயணிக்கும் அரச ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் கூறப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கமைய செயற்பட வேண்டும்.பேருந்து,ரயில்களில் பயணிக்கும் போது தங்களுடைய அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும்.தனிப்பட்ட தேவைகளுக்காக செல்வோர் கட்டாயம் அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும்.அந்த சமயத்தில் உரிய ஆவணங்களையும் தம்வசம் வைத்திருக்க வேண்டும்.இவர்களுக்காக நாங்கள் புதன்கிழமை முதல் சில ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்க எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் தலதா பெரஹரையை முன்னிட்டு கண்டியில் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.





