அத்தியாசிய திருத்த பணிகள் காரணமாக வத்தளையில் அமைந்துள்ள சில பிரதேசங்களுக்கு நாளை(26) காலை 10 மணி தொடக்கம் அடுத்து வரும் 24 மணிநேர காலப்பகுதிக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய வத்தளை நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதி,மாபோலையில் ஒரு பகுதி,வெலிகடமுல்ல, ஹெந்தல வீதி,நாயகந்த சந்தி வரையிலான சகல குறுக்கு வீதிகள்,அல்விஸ் டவுண்,மருதானை வீதி, புவக்வத்த வீதி,கலககதூவ வீதி மற்றும் கெரவலபிட்டியின் ஒரு பகுதி ஆகிய பிரதேங்களில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.





