அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதல் கட்டத்தை பெற்றோருக்கான தகவல் !!!

0
392

அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் இரண்டாம் கட்டத்தை பெற்றுக் கொள்ளாத மக்கள் தேவையற்ற அச்சத்தை தவிர்த்து கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அடுத்து சில நாட்களில் 14 லட்சம் அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் சன்ன ஜயசுமன அது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, “உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்ப ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளின் முதல் கட்டத்தை பெற்றுக் கொண்ட பின்னர் அதன் இரண்டாம் கட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான காலம் 6 மாதம் வரை உள்ளது.நாட்டில் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளின் முதல் கட்டத்தை பெற்றுக் கொண்டவர்கள் காணப்படுகின்றனர்.அவர்களுக்கு இன்னும் 6 மாத காலம் நிறைவடையவில்லை.அடுத்து வரும் நாட்களில் ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக 14 லட்சத்து 70 ஆயிரம் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன” என தெரிவித்துள்ளார்.