அமைச்சர் ரோஹண திஸாநாயக்கவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

0
286

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண திஸாநாயக்க கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளின் மூலம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அமைச்சர் மாத்தளையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மைய நாட்களில் தன்னுடன் தொடர்புகளை பேணிய அனைவரையும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்வதாக அமைச்சர் ரோஹண திஸாநாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.