பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்புவதற்கு இரு வேறு தினங்களை ஒதுக்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் இன்றைய தினம்(06) பாரளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இனமேல் வாய்மொழி பதில்கள் தேவைப்படும் கேள்விகளை எழுப்புவது காலை 10 மணியுடன் நிறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையற்ற விளக்கம் மற்றும் மேலதிக விளக்கம் இல்லாமல் நேரடியாக கேள்விகளை கேட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
காலை 11 மணிக்கு பின்னர் மீதமுள்ள கேள்விகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு நேரம் தேவைப்பட்டால் அவற்றுக்கு அடுத்து வரும் தினங்களில் உள்ள நிகழ்ச்சி நிரல்களில் சேர்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 27 இன் கீழ் கேள்விகளை கேட்பதற்கு 5 நிமிடங்கள் வழங்கப்படும் எனவும் அவற்றுக்கு பதில்களை வழங்குவதற்கும் 5 நிமிடங்கள் வழங்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.





