ஆப்கானிஸ்தானின் ஊடக தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்!!!

0
319

ஆப்கானிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகளால் அந்நாட்டின் தேசிய ஊடகப்பிரிவின் தலைவர் தாவா கான் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

தீவிரவாதிகள் தாவா கானை இலக்கு வைத்து நேற்றைய தினம்(06) துப்பாக்கி சூடுகளை நடத்தி உள்ளனர்.அந்த சந்தர்ப்பத்தில் அவர் காபூல் மசூதிக்கு வருகை தந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நோட்டா படைகள் ஆப்கானிஸ்தானில் நடவடிக்கைகளை முடித்து விட்டு வெளியேறியதை அடுத்து தலிபான் தீவிரவாதிகள் வன்முறை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

தலிபான் தீவிரவாதிகளுக்கு,ஆப்கானிஸ்தான் அரசின் சமாதான செயற்பாடுகளின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளளுமாறு,ஐக்கிய நாடுகள் சபை பல தடவைகள் தெரிவித்துள்ளது.