2 வாரங்களுக்கு மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்துக்கு தடை!!!

0
376

இன்று(13) நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் விவசாயம்,துறைமுககங்கள் மற்றும் ஆடை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பணியிடங்களில் சேவைபுரிபவர்களை அழைப்பது தொடர்பில் நிறுவன தலைவர்கள் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் செப்டம்பர் 15 ஆம் திகதியிலிருந்து நடைமுறையாகும் வகையில் பொது இடங்களில் பயணம் செய்பவர்கள் இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட அட்டைகளை கட்டாயம் அருகில் வைத்திருக்க வேண்டும்.இதனை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.