எதிர்வரும் நாட்களில் விமான நிலையங்கள் திறக்கப்படுகின்றனவா???

0
715

நாட்டின் விமான நிலையங்கள் எதர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படும் நிலையில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு சுற்றுலாத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த அனுமதி தொடர்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமென்றும் இருப்பினும் தனிமைப்படுத்தலில் கடுமையான சட்ட விதிமுறைகள் பயன்படுத்தப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சுற்றுலாப்பயணிகள் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்களில் உள்நாட்டு மக்கள் தங்குவதற்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது என சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்த பின்னர் கட்டாய பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.