தப்பிச்சென்ற கொரோனா நோய் தொற்றுக்குள்ளான நபர் எஹலியகொடையில் வைத்து கைது

0
344

 

நேற்றிரவு 7.30 மணியளவில் வாழைச்சேனை-புனானி கொவிட் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கொரோனா நோய்தொற்றுக்குள்ளான நபரொருவர் எஹலியகொட பெல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த நபர் இன்று காலை 8.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொலன்னாவ-மீதொடமுல்ல விஹார மாவத்தை பிரதேசத்தில் பேக்கரியொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டு புனானி கொவிட் நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு மற்றும் குறித்த நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற நபர் பயணித்த பாதை தொடர்பாகவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.