தளபதி விஜய்யின் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது பீஸ்ட் திரைப்படம் .
பீஸ்ட் பட்ஜெட்
இந்நிலையில், பீஸ்ட் படத்தின் பட்ஜெட், டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் மார்க்கெட்டிங் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே சுமார் ரூ. 165 கோடியாம். மேலும், டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் மார்க்கெட்டிங் இரண்டையும் சேர்த்து, மொத்தம் பீஸ்ட் படத்திற்கு ரூ. 175 கோடி செலவு என தெரியவந்துள்ளது.
ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் பீஸ்ட் திரைப்படம் முதல் நாளில் உலகமுழுவதும், ரூ. 70 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆம், நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்காக ரூ.80 கோடியளவில் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் ரூ.8 கோடி, அனிருத் – 4 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது





