பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன

0
668

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அடுத்த மாதத்தில் இருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேற்குறித்த விடயம் தொடர்பாக குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவிக்கையில் பொருட்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாகவே பேக்கரி பொருட்களுக்கான விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களுக்கு விதிக்கப்படும் வரியை அரசாங்கம் குறைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டால் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பை தடுக்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.