எரிபொருட்களின் விலைகள் லீட்டர் ஒன்றுக்கு 120 ரூபா வரையில் குறைக்கப்பட முடியும் என தகவல்

0
207

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொருள் வகைகளும் லீட்டர் ஒன்றுக்கு 120 ரூபா வரையில் குறைக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமான ஐக்கிய தொழிற்சங்க ஒன்றியத்தின் பேச்சாளர் ஆனந்த பாலித இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் சில்லறை விலை குறைந்தபட்சம் 125 ரூபாவினால் குறைக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணை விலையை லீட்டர் ஒன்றுக்கு 110 ரூபாவினால் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி எரிபொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்களவு குறைக்கப்படும் என முன்னதாக எரிசக்தி அமைச்சர் நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.