மக்கள் நீதி மய்யக் கட்சியின் 4 ஆம் ஆண்டு துவக்க விழாவுக்கு டெல்லி முதல்வருக்கு அழைப்பு

0
527

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி மக்கள் நீதி மய்யம் கட்சி நடிகர் கமல்ஹாசனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருடத்திலேயே நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொண்ட குறித்த கட்சியானது தமிழகம் உட்பட சென்னையில் உள்ள பல இடங்களில் 3 ஆம் இடத்தை பிடித்தது.

அத்துடன் இப்பொழுது 2021 ஆம் ஆண்டுக்கான சட்ட மன்ற தேர்தலுக்கான முதல் சுற்று பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ள கமல்ஹாசன் மேலும் தேர்தல் பணி, அடுத்தக்கட்ட தேர்தல் பிரச்சாரம், கூட்டணி உள்ளிட்ட வேலைகளில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனிடையே கட்சியின் 4 ஆம் ஆண்டு துவக்க விழா பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.குறித்த விழாவை பிரமாண்ட பொது கூட்டமாக மதுரை அல்லது திருச்சியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கூட்டத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.