மார்ஷல் தீவின் கொடியுடன் சென்ற கப்பல் மீது நேற்று முன்தினம் ஹவுதி தாக்குதல்

0
170

கிரிஸ்(Greece) நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மார்ஷல் தீவின் கொடியுடன் சென்ற கப்பல் மீது நேற்று முன்தினம் ஹவுதி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் கப்பல் சேதமாகி, தண்ணீர் கப்பலுக்குள் சென்றதோடு, கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு ஆபத்து ஏதும் நேரவில்லை.

இந்த நிலையில் லாக்ஸ் என்ற தாக்குதலுக்கு உள்ளான கப்பல் ஈரானுக்கு தானியங்கள் ஏற்றி சென்றது எனத் தெரியவந்துள்ளது.கப்பல் முழுவதும் தானியங்கள் நிரம்பியிருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹவுதி குழுவுக்கு ஈரான்தான் முழு ஆதரவு கொடுத்து வருகிற நிலையில் ஆதரவு அளித்த நாட்டிற்கு தானியங்கள் கொண்டு சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.