அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

0
226

அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,

1 பிரதமரின் செயலாளராக பிரதீப் சப்புதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

2 நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

3 வௌிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

4 நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள், தொழில் அமைச்சின் செயலாளராக பிரதீப் யசரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

5 போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளராக கே.டி.எஸ்.ருவன்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

6 கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக திலகா ஜயசுந்தர செயற்படவுள்ளார்.

7 பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக கே.மகேசன் நியமனம் பெற்றுள்ளார்.

8 வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவி எம்.எம்.நயிமுதீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

9 கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளராக எம்.பீ.அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

10 சுகாதார அமைச்சின் செயலாளராக வைத்திய நிபுணர் பாலித மஹிபால நியமிக்கப்பட்டுள்ளார்.

11 சுற்றாடல், வனஜீவராசிகள், வனவளம், நீர் விநியோகம், பெருந்தோட்டக் கைத்தொழில், சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளராக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

12 விவசாயம், காணி, கால்நடை வள, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளராக என்.எம்.விக்கிரமசிங்க நியமனம் பெற்றுள்ளார்.

13 புத்த சாசனம், சமய மற்றும் கலாசார விவகாரம், தேசிய ஒருமைப்பாடுகள், சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக ரஞ்சித் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

14 வலுசக்தி அமைச்சின் செயலாளராக பேராசிரியர் உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.