முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிவலிங்கத்தை ஒத்த உருவம் கொண்ட சிதைவு கண்டுப்பிடிப்பு

0
326

கடந்த 18 ஆம் திகதி குருந்தூர் மலையில் குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாக குறிப்பிட்டு அப்பகுதியில் தொல்லியல் ஆய்வுப் பணிகளை தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டனர்.

அங்கு தொடர்ந்தும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளுப்பட்ட வந்த நிலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த உருவத்தை கொண்ட சிதைவுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளதாவது, ” முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைப்பெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS.திருச்செல்வம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,குறித்த இடத்தில் இரண்டு அடி உயரமான மற்றுமொரு கல்லொன்று நிலத்திற்கு அடியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அது தொடர்பாக தொல்லியல் அதிகாரிகள் எதுவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதோடு,
அவர்கள் இது தொடர்பான உண்மையை உறுதிப்படுத்த வேண்டும்.