இலங்கையில் புதிய வகை வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததினால் நாடு முழுவதிலும் மீண்டும் முடக்கப்படுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சன்டே டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதுமாக தனிமைப்படுத்தப்படுவது தொடர்பாக இதுவரை எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இது குறித்து நாளை இடம்பெறவுள்ள தேசிய பணிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சன்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்பொழுது புதியவகை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,குறித்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவதனால்,இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என்று சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் துணைவேந்தர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.




