மன்னாரில் இருந்து இந்தியாவிற்கு சட்ட விரோதமாக ஒரு தொகை நத்தைகளை கடத்தி செல்ல இருந்த நபர் கைது

0
333

மன்னாரில் இருந்து இந்தியாவிற்கு சட்ட விரோதமாக ஒரு தொகை நத்தைகளை கடத்தி செல்ல இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நத்தைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் குறித்த சந்தேக நபர் மீன்பிடி படகுகள் மூலம் நத்தைகளை கொண்டு செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சந்தேக நபர் இதற்குமுன்னர் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு இந்தியாவிற்கு நத்தைகளை கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 50 வயதுடைய எருக்கலம்பிடியவில் வசிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சந்தேக நபர் நத்தைகளுடன் மன்னார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.