முழுமுகம் ஹெல்மட் அணிந்து பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்துள்ளார்.
வெல்லவாய பிரதேசத்தில் வசிக்கும் நாமல் பிரசங்க எனும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க இந்த அறிக்கையை வெளியிட்டார்.
அத்துடன் இனிவரும் காலங்களில் இது போன்ற சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் மேலும் தெரிவித்துள்ளார்.





