மேல்மாகாணத்தில் 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும்

0
289

மேல்மாகாணத்தில் உள்ள 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சின் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் “தெரண அருண” நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அதன்படி கொழும்பு மாவட்டத்தில் 27 ஆயிரத்து 18 பேருக்கும்,கம்பஹா மாவட்டத்தில் 17 ஆயிரத்து 622 பேருக்கும்,களுத்துறை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பு மாவட்டத்திலுள்ள கொலன்னாவ,கொதடுவ,மொறட்டுவ,எகொடஉயன மற்றும் ஹங்வெல்ல ஆகிய பகுதிகளுக்கும் களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த,பண்டாரகம மதுகம,பாணதுரை, ஹொரணை,பேருவலை,களுத்துறை ஆகிய பகுதிகளுக்கும் கம்பஹா மாவட்டத்தில் கம்பஹா,அத்தநகல்ல, மீகமுவ,சீதுவ,மஹர,பியகம,வத்தல,மினுவங்கொட ராகம,ஜா-எல ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட 30 தொடக்கம் 60 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இன்றைய தினம் தடுப்பூசிகளை செலுத்துமாறு ஜனாதிபதியிடம் இருந்து அறிவுறுத்தல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.