அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நாளை (20) கொழும்பு உட்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை காலை 8.00 மணி தொடக்கம் இரவு 12 மணிவரை நீர் வழங்கள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு,தெஹிவலை-கல்கிஸ்ஸ,கோட்டை மற்றும் கடுவல நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், மகரகம,பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர் வழங்கள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொடிகாவத்த மற்றும் முல்லேரியா ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் வழங்கல் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





