பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டு விடுதலை

0
497

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் அவர் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 26 வயதுடையவர் என்பதோடு நேற்றைய தினம் பகல் வேளையில் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு 6 மணி நேர விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நபரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.