நேற்றைய தினம் சுகாதார அமைச்சர்,சுகாதார அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டார்

0
430

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி முழுமையாக குணமடைந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நேற்றைய தினம் சுகாதார அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டு உள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வைரஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் முன்னேற்றம்,எதிர்கால சுகாதார மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி திட்டத்தின் செயற்பாடுகள்,பி.சி.ஆர் பரிசோதனைகளின் தற்போதைய நிலை,சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் சிகிச்சை மையங்களின் தற்போதைய நிலை குறித்தும் கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் சுகாதார வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த காலங்களில் உறுதுணையாக செயற்பட்ட சுகாதார ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.