நேற்றைய தினம் கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகள்

0
452

நேற்றைய தினம் 466 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் 166 பேரும்,கம்பஹாவில் இருந்து 76 பேரும்,நுவரெலியாவில் இருந்து 48 பேரும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுடன் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81,933 ஆகவும்,அவர்களில் 76,961 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் எனவும்,தற்பொழுது 4,513 பேர் வைத்தியசாலைகளில் இருந்து தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் 02 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்கள் கடவத்த பிரதேசத்தில் வசிக்கும் 62 வயதுடைய பெண் மற்றும் வத்தளை பிரதேசத்தில் வசிக்கும் 83 வயதுடைய பெண் ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 459 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கொவிட்-19 நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் 3 லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.