இன்றைய தினம் 05 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு

0
414

இன்றைய தினம் 05 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் பதிவான மொத்த கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 464 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் நவத்தகல பிரதேசத்தில் வசிக்கும் 69 வயதுடைய ஆண்,நாரேஹன்பிடி பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதுடைய பெண்,கண்டியில் வசிக்கும் 70 வயதுடைய ஆண்,கொழும்பு 09 பிரதேசத்தில் வசிக்கும் 71 வயதுடைய ஆண் மற்றும் வெயங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 71 வயதுடைய ஆண் ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 240 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக 247 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இன்றைய நாள் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 487 ஆக காணப்படுகின்றது.

அதன்படி நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 82,420 ஆக அதிகரித்துள்ளது.