இன்றைய காலநிலை

0
516

இரத்தினபுரி,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அற்ற நிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய,சப்ரகமுவ ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.