பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து

0
457

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று எல்ல-ஹல்பே பகுதியில் கவழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் 12 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பேருந்து ஓட்டுனரின் கவனயீனம் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை மற்றும் தெமதோர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.