நாட்டில் விசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் கைது

0
313

நாட்டில் விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டினர் குழு ஒன்று இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை அடையாளம் காண்பதற்கு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் தாய்லாந்து பிரஜைகள் 08 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 06 ஆம் திகதி நைஜீரிய பிரஜைகள் 03 பேர் உட்பட 08 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.