இன்றைய தினம் 05 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி இலங்கையில் பதிவான மொத்த கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் அநுராபுரம் பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண்,ஹேமாதகம பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய பெண்,தர்கா பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண்,கொழும்பு 06 பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் மற்றும் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





