ஹட்டன் பகுதியில் ஆலங்கட்டி மழை

0
539

இன்று பிற்பகல் வேளையில் ஹட்டன் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் உள்ள குடாகம பிரதேசத்தில் இவ்வாறு ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சுமார் 5 நிமிடங்கள் வரை அதிக அளவில் ஐஸ் கட்டிகள் விழுந்ததாக குடாகம பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆலங்கட்டி மழை தணிந்த பின்னர் அதனை அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் தொலைபேசிகளில் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த ஆலங்கட்டி மழைக்கு பின்னர் ஹட்டன்,நோர்வுட் மற்றும் கொட்டகலை பிரதேசங்களுக்கு கடுமையான மழை பொழிவு காணப்பட்டதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.