இலங்கை தொடர்பாக பல நாடுகள் முன்வைத்த தீர்மானம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இன்று வாக்கெடுப்புக்களை முன்னெடுக்கம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை பல நாடுகள் தாக்கல் செய்திருந்தன.
இலங்கையின் பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம்,மனித உரிமைகள்,பாதுகாப்பு போன்ற யோசனைகளை பிரித்தானியா,ஜேர்மனி,கனடா,வடக்கு மெஸிடோனியா,மொன்டினீக்ரோ,மலாவி ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.
குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட தீர்மானித்துள்ளன.
அத்துடன் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





