இராணுவத் தளபதி பொது மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

0
472

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வரவிருக்கும் பண்டிகை காலங்களில் நாடு முடக்கப்படாது என்றும் அத்துடன் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் விழா ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன மேற்குறிப்பிட்டவாரு தெரிவித்துள்ளார்.