கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு தொடர்பான புதிய பரிசோதனைகள் ஆரம்பம்

0
322

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவதுடன்,அதன் விகாரம் பற்றிய புதிய பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக,ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு உயிரியில் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி,எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய் அன்று புதிய பரிசோதனைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்பொழுது நாடு பூராகவும் பதிவான கொரோனா வைரஸின் மரபணு வகைகளை,சாதாரண பி.சி.ஆர் பரிசோதனைகளின் மூலம் கண்டறிய இயலாத காரணத்தினால்,குறித்த புதிய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்கா,பிரித்தானியா,தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வகைகள்,இலங்கையிலும் பரவி உள்ளதா என்பதை கண்டறிய,குறித்த பரிசோதனை மூலம் அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய பரிசோதனையின் மூலம் கிடைக்கப்பெறும் முடிவுகளை குறுகிய காலத்திற்குள் பெற்றுக் கொள்ள முடியும் என வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.