காலி மாவட்டத்திற்குட்பட்ட ரத்கம பொலிஸ் பிரிவிக்குட்பட்ட இபுல்கொட மற்றும் கடுதம்மே கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று இரவு 8.00 மணிமுதல் தனிமைப்படுத்தலுக்குஉட்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னதாக கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவின் பொல்ஹேன, ஹீரெலுகெதர,களுவக்கல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்வென்னவத்தை வடக்கு மற்றும் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இன்று இரவு 8.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் களுத்துறை மாவட்டத்தின் மீகாதென்னை பொலிஸ் அதிகார பிரதேசத்தில் உள்ள மிரிஸ்வத்தை மற்றும் பெலவத்தை வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புஹார் கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் விசேட பொருளாதார மத்திய நிலையமும் இன்றிரவு 8.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





