நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு குழுவினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சிங்கள ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு மொத்த விற்பனைக்கு மாத்திரம் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும் இன்று காலை மரக்கறிகள் பழங்கள் மற்றும் மீன்களை விற்பனை செய்வதற்கு விவசாயிகள்,வர்த்தகர்கள் சந்தைக்க சென்ற போதிலும் அதனை கொள்வனவு செய்வதற்கு மிக குறைந்த அளவிலானோர் மாத்திரமே வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த விவசாயிகளும் வர்த்தகர்களும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.





