நாடு முழுவதும் உள்ள 50 ஆயுர்வேத மருத்துவமனைகளை இடைநிலை கொவிட் சிகிச்சை மையங்களாக பயன்படுத்த தீர்மானம்

0
301

நாடு முழுவதும் உள்ள 50 ஆயுர்வேத மருத்துவமனைகளை இடைநிலை கொவிட் சிகிச்சை மையங்களாக பயன்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (23) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயுர்வேத மருத்துவமனைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுவதன் மூலம் கொவிட் சிகிச்சைகளுக்காக 3500 எண்ணிக்கையிலான படுக்கைகளை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு மாற்றப்படும் ஆயுர்வேத மருத்தவமனைகளில் பணிபுரியும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும்,கொரோனா சிகிச்சை தொடர்பான சகல பயிற்சிகளையும் வழங்கி,குறித்த ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசிகள் விரைவில் செலுத்தப்படும் என்று கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.