தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது

0
332

தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணககட்டுப்பாடுகள் ஜுன் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பயணக்கட்டுபாடுகள் நீக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு ஒருவர் மாத்திரம் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜுன் மாதம் 4 ஆம் திகதி பயணக்கட்டப்பாடுகள் தளர்த்தபடுவதாகவும்,அச்சந்தர்ப்பத்திலும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு ஒருவர் மாத்திரம் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.