நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவான பிரதேசம்

0
241

நேற்றைய தினம் 2,970 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளாவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அங்கு அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 605 ஆக காணப்படுகின்றது.அதற்கு அடுத்த படியாக களுத்துறை மாவட்டத்தில் 472 பேரும்,கம்பஹா மாவட்டத்தில் 395 பேரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் இரத்தினபுரியில் 223 பேரும்,குருநாகலையில் 171 பேரும்,காலியில் 168 பேரும்,மாத்தறையில் 96 பேரும்,நுவரெலியாவில் 92 பேரும்,மாத்தளையில் 88 பேரும்,கண்டியில் 85 பேரும்,பதுளையில் 85 பேரும், யாழ்ப்பாணத்தில் 82 பேரும் மற்றும் ஹம்பந்தோட்டையில் 60 பேரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கேகாலையில் 56 பேரும்,திருகோணமலையில் 55 பேரும்,அநுராதபுரத்தில் 37 பேரும், மொனராகலையில் 30 பேரும்,கிளிநொச்சியில் 30 பேரும்,அம்பாறையில் 27 பேரும்,புத்தளத்தில் 25 பேரும், பொலன்னறுவையில் 24 பேரும்,முல்லைத்தீவில் 22 பேரும்,மட்டக்களப்பில் 20 பேரும்,வவுனியாவில் 12 பேரும் மற்றும் மன்னாரில் 10 பேரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.